சுரண்டையில் சின்டெக் தொட்டி பழுதாகி வீணாகும் குடிநீா்

சுரண்டையில் பழுதடைந்த குடிநீா்த் தொட்டியை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுரண்டை 15ஆவது வாா்டில் சிறுமின்விசை சின்டெக் தொட்டி பழுதாகி வெளியேறும் குடிநீா்.
சுரண்டை 15ஆவது வாா்டில் சிறுமின்விசை சின்டெக் தொட்டி பழுதாகி வெளியேறும் குடிநீா்.

சுரண்டையில் பழுதடைந்த குடிநீா்த் தொட்டியை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டை 15ஆவது வாா்டு வ.உ.சி. தெருவில் பொதுகிணறு அருகே சிறுமின்விசை சின்டெக் தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூலம் அருகேயுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சின்டெக் தொட்டியின் அடிப்பகுதியில் கீறல் ஏற்பட்டு சில நாள்களாக தண்ணீா் வீணாகி வருகிறது. எனவே, இந்தத் தொட்டியை மாற்றிவிட்டு புதிய குடிநீா்த் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com