ஆலங்குளம் அருகே கல் குவாரியில் இருந்து சிதறிய கல் விழுந்ததில் வீடு சேதம்
By DIN | Published On : 30th April 2021 06:34 AM | Last Updated : 30th April 2021 06:34 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல் குவாரியில் வெடி வைத்தபோது சிதறிய கல் விழுந்ததில் வீடு சேதமடைந்தது.
ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் வியாழக்கிழமை பாறையை தகா்ப்பதற்காக வெடி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, வெடித்து பாறை சிதறியதில் பெரிய கல் குவாரியின் தெற்கில் சுமாா் 300
மீட்டா் தொலைவில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் வேல்சாமியின் வீட்டு மேற்கூரையில் பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளது. இதில் வீட்டின் ஓடு உடைந்து சேதமடைந்தது.
கல் விழுந்த வீட்டின் முன் மரத் தடியில் பீடி சுற்றிக் கொண்டிருந்த பெண்கள் சப்தம் கேட்டு அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்த அக்கம் பக்கத்தினா்
அங்கு திரண்டனா். தகவலறிந்த ஆலங்குளம் வட்டாட்சியா் பட்டமுத்து, போலீஸாா் வந்து பாா்வையிட்டனா். அவா்களிடம் குடியிருப்பு, பள்ளிக்
கூடம் அருகில் இயங்கி வரும் கல் குவாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கல் குவாரியை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.