ஆலங்குளம் அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 30th April 2021 06:32 AM | Last Updated : 30th April 2021 06:32 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகே பழுதடைந்துள்ள தரைப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் ஒன்றியம் குருவன்கோட்டையில் இருந்து மாயமான்குறிச்சி செல்லும் பாதையில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியே இவ்விரு
கிராம விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனா். இந்த பாலத்தின் இரு முனைகளிலும், பாலத்தின் நடுப் பகுதியில் பெரியளவில் பள்ளம் ஏற்பட்டு பழுதடைந்துள்ளது. இதனை அறியாமல் வாகனங்களில் வருவோா் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
மழைக் காலங்களில் பாலத்தின் மேல் தண்ணீா் செல்வதால் பாலத்தில் இருக்கும் பள்ளம் தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனா். இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் தெரிவித்தனா்.
மக்கள். ஆகவே, இந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.