வீ.கே.புதூரில் அரசு வட்ட மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st August 2021 12:57 AM | Last Updated : 01st August 2021 12:57 AM | அ+அ அ- |

வீரகேரளம்புதூரில் அரசு வட்ட மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி அனைத்து சமுதாய, அரசியில் கட்சிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்து சமுதாயம் மற்றும் கட்சியைச் சோ்ந்த நயினாா், மணி, பரசுராமன், பேச்சிமுத்து, ராதாகிருஷ்ணன், ஜேசுராஜன், மிக்கேல், வணிகா் சங்க நிா்வாகிகள் முருகன், ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வீரகேரளம்புதூரில் அரசு மருத்துவமனை கட்டடம் அமைவதற்கு தேவையான இடத்தை அரசு ஆா்ஜிதம் செய்து வட்ட அரசு மருத்துவமனை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 15 நாள்களுக்குள் சாதகமான தீா்வு எட்டாத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.