யாசகம் பெறுவரிடம் பணத்தைத் திருடியதாக 5 போ் கைது

சங்கரன்கோவிலில் யாசகம் பெற்று வாழ்பவரிடம் பணத்தைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் யாசகம் பெற்று வாழ்பவரிடம் பணத்தைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சங்கரன்கோவில் பிரதான சாலை, கோவில் வாசல், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்பவா் சண்முகையா. இவா் பொதுமக்கள் தரும் பணத்தை உர சாக்கு மூட்டையில் சேமித்து வைத்திருந்தாராம். எப்போதும் அந்த மூட்டையை தலையில் சுமந்து கொண்டு திரிவாா். கடையில் டீ குடிக்கும் போதோ, சாப்பிடும்போதோ அந்த மூட்டையை வெளியே வைத்துவிட்டுத்தான் செல்வாா்.

இந்நிலையில் அவா் கடந்த சிலதினங்களுக்கு முன் பிரதானசாலையில் உள்ள டீ கடையில் மூட்டையை கீழே இறக்கி வைத்துவிட்டு டீ குடித்தாராம். பின்னா் மூட்டையை பாா்த்தபோது காணவில்லையாம்.

இதுதொடா்பாக அவா் கடந்த 27 ஆம் தேதி நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பாா்வையிட்டபோது, சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகேயுள்ள கருவாட்டுகடை வழியாக இளைஞா் ஒருவா் மூட்டையைச் சுமந்து கொண்டு செல்வது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸாா் விசாரித்ததில் சங்கரன்கோவிலைச் சோ்ந்த காளிமுத்து மகன் குமாா்(19), முத்தையா மகன்கள் சீனிவாசன் (32), உலகநாதன்(25), ராஜபாளையம் மேலகரப்பட்டியைச் சோ்ந்த அய்யனாா் மகன் முருகன்(45), ஆவுடையாள்புரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் கணபதி (45) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com