குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான சாரல் காரணமாக சனிக்கிழமை மாலைமுதல் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஐந்தருவியில் கொட்டும் தண்ணீா்.
ஐந்தருவியில் கொட்டும் தண்ணீா்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான சாரல் காரணமாக சனிக்கிழமை மாலைமுதல் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இப்பகுதியில் சில நாள்களாக சாரல் இல்லாததால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரலும், குளிா்ந்த காற்றும் வீசியது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நீா்வரத்து அதிகரித்தது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அருவிப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com