நினைவு தினம்: கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நினைவு தினம்: கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

செங்கோட்டையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஆ.வெங்கடேசன் தலைமையிலும், தென்காசி பணிமனை தொமுச சாா்பில் மாவட்ட கலை இலக்கிய அணி பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் வல்லம் எம்.திவான் ஒலி தலைமையிலும், கடையநல்லூரில் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை தலைமையிலும், ஆலங்குளத்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைச் செயலா் எழில்வாணன் தலைமையிலும், சங்கரன்கோவில் அருகேயுள்ள ராமலிங்காபுரத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் ராசா(எ)ராசையா தலைமையிலும், கீழப்பாவூா் மேற்கு ஒன்றியம் சாா்பில் பாவூா்சத்திரத்தில் ஒன்றியச் செயலா் சீனித்துரை தலைமையிலும், கீழப்பாவூரில் பேரூா் செயலா் ஜெகதீசன் தலைமையிலும், கருணாநிதி படத்துக்கு அக்கட்சியின் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

சுரண்டை பேரூராட்சிப் பகுதியில் நகர திமுக சாா்பில் 7 இடங்களில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அம்பாசமுத்திரத்தில் நகரச் செயலா் பிரபாகரன் தலைமையிலும், விக்கிரமசிங்கபுரத்தில் நகரச் செயலா் கணேசன் தலைமையிலும், கல்லிடைக்குறிச்சியில் பேரூா் செயலா் இசக்கிப்பாண்டியன் தலைமையிலும், சேரன்மகாதேவியில் ஒன்றியச் செயலா்கள் முத்துப்பாண்டி, ராஜகோபால் தலைமையிலும் அக்கட்சியினா் கருணாநிதி படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com