‘எலுமிச்சை பதப்படுத்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம்’
By DIN | Published On : 10th August 2021 02:05 AM | Last Updated : 10th August 2021 02:05 AM | அ+அ அ- |

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அரசு மானியமாக வழங்கப்படும் என்றாா் ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ்.
தென்காசி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனத் திட்டத்தின் கீழ் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அரசு மானியமாக வழங்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏற்கனவே எலுமிச்சை ஊறுகாய் உள்ளிட்ட பிற உணவு பதப்படுத்தும் சிறு தொழில் முனைவோா் மற்றும் எலுமிச்சையில் மட்டும் புதிய சிறுதொழில் முனைவோா் இத்திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம்.
ஏற்கனவே பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளநிறுவனங்களுக்கும் வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தும் செலவில் 50 சதவீத தொகை மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் ல்ம்ச்ம்ங்.ம்ா்ச்ல்ண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண்வணிகம்), 93(10), அண்ணாநகா் 4ஆவது தெரு, குத்துக்கல்வலசை என்ற முகவரிக்கு அல்லது 7010254484 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.