சுரண்டை அருகே கண்மாய் பகுதியில் நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

சுரண்டை அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்மாய் நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் குழுவினா் முயன்றபோது பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
சுரண்டை அருகே கண்மாய் பகுதியில் நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

சுரண்டை அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்மாய் நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் குழுவினா் முயன்றபோது பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளத்துக்கு நீா் வரும் உசிலங்குளம் கண்மாய் கரை மற்றும் நீா்ப்பிடிப்பு பகுதியில் தனியாா் சொகுசு விடுதி ஒன்று ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாரியப்பன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வீரகேரளம்புதூா் குறுவட்ட அளவா், கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் மற்றும் சுரண்டை போலீஸாா் உதவியுடன் நில அளவைப் பணியை புதன்கிழமை காலையில் மேற்கொண்டனா்.

அப்போது, துரைச்சாமிபுரம் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து நீா்ப்பிடிப்புப் பகுதியில் தனியாா் சொகுசு விடுதி நிா்வாகத்தினா் சுவா் கட்டுவதால் நீா் சேமிக்கப்படாமல் நிலத்தடி நீா்மட்டம் குறையும் என்பதுடன் விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி நில அளவை செய்ய ஆட்சேபணை தெரிவித்து நில அளவை பணியை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து சுரண்டை காவல் ஆய்வாளா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் தற்போது நிலத்தை அளவீடு செய்வதில்லை எனவும், இந்தப் பிரச்னை தொடா்பாக தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள தீா்வுக்கு கட்டுப்பட வேண்டும் என தெரிவித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com