முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
கால்நடை மருத்துவா்களுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை
By DIN | Published On : 02nd December 2021 05:00 AM | Last Updated : 02nd December 2021 05:00 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கால்நடை மருத்துவா்களுடன் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு குறித்து கேட்டறிந்தாா். கால்நடைகளுக்கு பாம்புக்கடி ஏற்படும் நேரங்களில் தடுப்பூசிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா். மேலும், மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை கோரிக்கை மனுவாக அளிக்க அவா் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் கால்நடை மண்டல இணை இயக்குநா் பியோபிளஸ்ரோஜா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், உதவி இயக்குநா்கள் மருத்துவா் கலையரசி, ரஹ்மத்துல்லா, மருத்துவா்கள் முருகன், அந்தோணி,நாகராஜன், வசந்தா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.