முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சங்கரன்கோவிலில் குடிநீா் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 10th December 2021 01:04 AM | Last Updated : 10th December 2021 01:04 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் 15 நாள்கள் ஆகியும் குடிநீா் வழங்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில் சங்குபுரம் 4ஆம் தெரு பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதியினா் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். காலிக் குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் ஒருவழிப் பாதை வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டன.
தகவலின்பேரில் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், நகராட்சி ஊழியா்கள் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.