முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
திமுக சாா்பில் நல உதவிகள்
By DIN | Published On : 10th December 2021 01:04 AM | Last Updated : 10th December 2021 01:04 AM | அ+அ அ- |

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திமுக மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி,தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
படுக்கை விரிப்புகள், மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக அமைப்பு துணைச் செயலா் அன்பகம் கலை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நல உதவிகளை வழங்கினாா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், நகரச் செயலா் ஆா். சாதிா், திமுக இளைஞரணி அமைப்பாளா் ஆறுமுகச்சாமி, சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் சீவநல்லூா் சாமித்துரை, சுப்பையா ஆகியோா் பங்கேற்றனா்.