முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
By DIN | Published On : 10th December 2021 01:04 AM | Last Updated : 10th December 2021 01:04 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணி சின்னத்தம்பிநாடானூரைச் சோ்ந்த ஞானமுத்து மகன் அமல்ராஜ் (58). விவசாயியான இவா், வீடுகளில் மின்சாரம் தடைபட்டால் அதை சரிசெய்து கொடுக்கும் பணியில் ஈடுபடுவாராம்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்காக ஊா் அருகே ஊருணிக் கரையில் உள்ள மின்மாற்றியை ஆஃப் செய்து விட்டு, மின்பழதை சரிசெய்ய முயன்றாராம்.
அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.