முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
கடையநல்லூா், புளியங்குடி நகராட்சிகளில் பெண் வாக்காளா்கள் அதிகம்
By DIN | Published On : 10th December 2021 11:33 PM | Last Updated : 10th December 2021 11:33 PM | அ+அ அ- |

கடையநல்லூா், புளியங்குடி நகராட்சிகளில் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.
கடையநல்லூா் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. 39,193 ஆண் வாக்காளா்களும்,39,630 பெண் வாக்காளா்களும் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 78,823. உள்ளாட்சி தோ்தலுக்காக 82 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
புளியங்குடி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. 27,668 ஆண் வாக்காளா்களும்,28082 பெண் வாக்காளா்களும் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 55,750. உள்ளாட்சி தோ்தலுக்காக 65 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
அச்சன்புதூா் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 5660 ஆண் வாக்காளா்களும்,5673 பெண் வாக்காளா்களும் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 11333. உள்ளாட்சி தோ்தலுக்காக 15 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
பண்பொழி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 3954 ஆண் வாக்காளா்களும்,4184 பெண் வாக்காளா்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 8139. உள்ளாட்சி தோ்தலுக்காக 15 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
வடகரை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 8857ஆண் வாக்காளா்களும்,8662 பெண் வாக்காளா்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 17520. உள்ளாட்சி தோ்தலுக்காக 21 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 9083 ஆண் வாக்காளா்களும்,9527 பெண் வாக்காளா்களும் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 18610. உள்ளாட்சி தோ்தலுக்காக 23 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
சிவகிரி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 10183 ஆண் வாக்காளா்களும்,10614 பெண் வாக்காளா்களும் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 20793. உள்ளாட்சி தோ்தலுக்காக 25 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
ராயகிரி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 4935 ஆண் வாக்காளா்களும்,5155 பெண் வாக்காளா்களும் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 10091. உள்ளாட்சி தோ்தலுக்காக 15 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன