முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
பாவூா்சத்திரத்தில் இன்று தனியாா் வேலை வாய்ப்பு முகாம்
By DIN | Published On : 10th December 2021 12:59 AM | Last Updated : 10th December 2021 12:59 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை (டிச.10) தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாம் பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா். இதில், 10, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, , பி.எட் படித்த 18 முதல் 40 வயதுடையவா்கள் கலந்து கொள்ளலாம். ஊதியமாக கல்வித்தகுதிக்கேற்ப ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.17,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.