முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
ஆலங்குளம் அருகே அபாய நிலையில் தொடக்கப் பள்ளிக் கட்டடம்
By DIN | Published On : 19th December 2021 04:30 PM | Last Updated : 19th December 2021 04:30 PM | அ+அ அ- |

சேதமடைந்த பள்ளிக் கட்டடம்.
ஆலங்குளம் அருகே அபாய நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தெற்கு மாயமான்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஏற்கனவே இருந்த ஓட்டுக் கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 1982 இல் இதன் அருகிலேயே கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.
இந்தக் கட்டடம் கடந்த 2016-17 இல் விரிவான பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கான்கிரீட் மூலம் ரூ. 2 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. சீரமைத்த சுமார் 4 ஆண்டுகளிலேயே இந்தக் கட்டடத்தின் பெரும்பாலான மேல் பகுதி வெடிப்புகளுடனும் ஆங்காங்கே பெயர்ந்தும் காணப்படுகிறது.
இதையும் படிக்க- கடந்த நான்கு மாதமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
அண்மையில் பெய்த மழையால் இந்தக் கட்டடம் முழுவதும் மழை நீர் ஒழுகியுள்ளது. இதனால் மாணவர்கள் – ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர். வரும் காலங்களில் பெரிய அசம்பாவிதங்களைத் தடுக்க அபாய நிலையில் உள்ள இந்தக் கட்டடத்தின் மேற்கூரையை முற்றிலும் அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையாக உள்ளது.