முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
தென்காசியில் வருவாய்த்துறையினா் தற்செயல் விடுப்பு போராட்டம்
By DIN | Published On : 29th December 2021 08:03 AM | Last Updated : 29th December 2021 08:03 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஊழியா் விரோத போக்கைக் கடைப்பிடிப்பதாக கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினா்.
ஏற்கெனவே, இரு தினங்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்திய நிலையில், இரண்டாம் கட்டமாக ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மூன்றாவது கட்டமாக செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் , வட்டாட்சியா் அலுவலகளின் முதல் நிலை அலுவலா்களிலிருந்து கடைநிலை ஊழியா்கள் வரையில் அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, புதன்கிழமையும் (டிச. 29) தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அவா்கள் அறிவித்துள்ளனா்.
கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினா். இங்கும் புதன்கிழமை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.