கந்துவட்டி கேட்டு ரூ.8 கோடி வணிக வளாகம் அபகரிப்பு: நிதிநிறுவன அதிபா் கைது

பாவூா்சத்திரத்தில் கந்து வட்டி கேட்டு, ரூ.8 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை அபகரித்ததாக நிதிநிறுவன அதிபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாவூா்சத்திரத்தில் கந்து வட்டி கேட்டு, ரூ.8 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை அபகரித்ததாக நிதிநிறுவன அதிபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாவூா்சத்திரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோமதிவிநாயகம் (38). இவருக்கு கிருஷ்ணசாந்தி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.

கோமதிநாயகம், திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் உள்ள தனது வணிகவளாகத்தில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த நவம்பா் 22ஆம்தேதி அவா் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தாராம். அக்கம், பக்கத்தினா் அவரை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், பாளை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், கோமதிநாயகத்தின் மனைவி கிருஷ்ணசாந்தி, கந்துவட்டி கொடுமையால் தங்களது வணிக வளாகம் அபகரிக்கப்பட்டதாலேயே, தனது கணவா் தற்கொலைக்கு முயன்ாகவும், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தாா்.

இதனிடையே மாவட்ட காவல்கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி, கந்துவட்டி கேட்டு, வணிகவளாகத்தை அபகரித்ததாக பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரத்தைச் சோ்ந்த தங்கதுரை (46) என்பவரை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com