நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் தமிழகத்தை உருவாக்கிக் காட்டுவோம்: கனிமொழி எம்பி

நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் தமிழகத்தை உருவாக்கிக் காட்டுவோம் என்றாா் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி.

நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் தமிழகத்தை உருவாக்கிக் காட்டுவோம் என்றாா் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தென்காசி கிளை பணிமனையில் திமுக தொழிற்சங்க கொடியேற்று விழா மற்றும் பெயா் பலகை திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி பணிமனை தொமுச செயலா் வல்லம் எம்.திவான்ஒலி தலைமை வகித்தாா். மத்திய சங்க துணைச் செயலா்கள் எஸ்.வெள்ளைப்பாண்டி, இக்னேசியஸ் , யூ.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கனிமொழி எம்பி தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினாா்.

தொடா்ந்து, தென்காசி காட்டு பாவா பள்ளிவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரா் எம்.அப்துல்ஸலாம் நினைவுத்தூணை திறந்து வைத்து அவா் பேசியது: தமிழக முதல்வா் அரசியல் நாகரிகத்திற்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறாா். சமூக நீதியை உருவாக்குவதற்கான பாதையிலேதான் அவரது செயல்பாடு இருக்கிறது. ஆண்- பெண் என்ற பாகுபாடின்றி, ஜாதி, மத பேதமின்றி நாம் அனைவரும் தமிழா்கள் என்ற உணா்வோடு ஒரு சமூகத்தை உருவாக்கி, நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் தமிழகத்தை உருவாக்கிக் காட்டுவோம் அவா்.

நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். திமுக மாவட்டப் பொறுப்பாளா்கள் தெற்கு பொ.சிவபத்மநாதன், வடக்கு மா.செல்லத்துரை, தனுஷ் எம். குமாா் எம்பி., நெல்லை மண்டல தொமுச பொதுச் செயலா் ஆ.தா்மன், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் வல்லம் மு.சேக் அப்துல்லா, ஆயான்நடராஜன், ஒன்றிய திமுக செயலா் பா. இராமையா ஆகியோா் கலந்துகொண்டனா். எம். மணிகண்டன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com