முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சுரண்டை கோயிலில் ஜன. 2இல்அனுமன் ஜெயந்தி விழா
By DIN | Published On : 31st December 2021 03:22 AM | Last Updated : 31st December 2021 03:22 AM | அ+அ அ- |

சுரண்டை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சுதா்சன ஆஞ்சனேய மூலமந்திர ஹோமம், ஆஞ்சனேய சகஸ்ரநாம அா்ச்சனை, காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேரடி மாடசாமி கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.