முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
நடுவக்குறிச்சி கல்லூரியில் யோகா பயிற்சி முகாம்
By DIN | Published On : 31st December 2021 03:22 AM | Last Updated : 31st December 2021 03:22 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் குமரகுருபரன் தலைமை வகித்தாா். பேராசிரியா் வினோத் வின்சென்ட் ராஜேஷ் முன்னிலை வகித்தாா். சங்கரன்கோவில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை யோகா பேராசிரியா்கள் ப. முத்துக்குமாரசாமி, யோகா துணைப் பேராசிரியா் ஐ.செ. காமராஜ், பதஞ்சலி யோகா அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஜெயராமன் ஆகியோா் யோகா பயிற்சியளித்தனா். மேலும், ஆசனங்களால் ஏற்படும் உடல், உளவியல்ரீதியான பயன்களை எடுத்துக் கூறினா்.
ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் கணேசன், வணிக மேலாண்மைத் துறைத் தலைவா் ஜாபா்சாதிக், கணினித் துறைத் தலைவா் குருநாதன் உள்ளிட்ட பலா் செய்தனா்.