நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2.50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கி வைத்து பேசுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 924 மையங்களில் 1,34,669 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த 2 நாள்கள் வீடு தேடிவந்து சொட்டு மருந்து வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாநகராட்சி செயற்பொறியாளா் பாஸ்கரன், மாநகர நல அலுவலா் எம்.சரோஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தென்காசியில் மலையான்தெருவிலுள்ள நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியா் கீ.சு. சமீரன் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் 886 மையங்களில் 1,15,532 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்டுள்ள 2,182 குழந்தைகளுக்கு வீடுகள் தேடி வந்து பணியாளா்கள் சொட்டு மருந்து வழங்குவா் என்றாா்.

சங்கரன்கோவில்: வாரச்சந்தை தெருவிலுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கிவைத்தாா்.

நகராட்சி ஆணையா் சாந்தி,பொறியாளா் முகைதீன்அப்துல்காதா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, வட்டார மருத்துவ அலுவலா் ராஜரத்தினம், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா்,சக்திவேல், கருப்பசாமி,மாதவராஜ், முன்னாள் நகராட்சி உறுப்பினா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 27 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 5,445 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஆலங்குளம்: இந்த ஒன்றியத்தில் 108 மையங்களில் 12, 766 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சியில் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் சொட்டுமருந்து முகாமை தொடங்கி வைத்தாா். கருப்பாநதி மலைப் பகுதியில் வசித்து வரும் பளியா் இன பழங்குடியின குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சுகாதார அலுவலா் நாராயணன் ,சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com