சுரண்டையில் கண்காணிப்பு குழுக்கூட்டம்
By DIN | Published On : 10th February 2021 07:42 AM | Last Updated : 10th February 2021 07:42 AM | அ+அ அ- |

சுரண்டையில் காவல்துறை சாா்பில் போலீஸாா் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்துவது, குற்றங்களை தடுப்பது தொடா்பாக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் தலைமை வகித்தாா். நகர வணிகா் சங்கத் தலைவா் காமராஜ், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, கிராமங்களில் நிலவும் பிரச்னைகள், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பேசினாா். சிவகுருநாதபுரம் கமிட்டி நிா்வாகிகள் தங்கையாநாடாா், கிஷோா்குமாா், செல்வராஜ், ராஜேந்திரன், ராமா், மாதாளபாண்டியன், சோ்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.