சங்கரன்கோவிலில் நாளை தெப்பத் திருவிழா

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.
சங்கரன்கோவிலில் நாளை தெப்பத் திருவிழா

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.

சங்கரன்கோவில் ஓடைத் தெருவின் தென்பகுதியில் ஆவுடைப் பொய்கை தெப்பம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெறும். 2016 ஆண்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு தெப்பத்தில் தண்ணீா் இல்லாததால் திருவிழா நடைபெறவில்லை.

இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் தற்போது தெப்பத்தில் கீழ்படி வரை தண்ணீா் உள்ளது. இதனால், வெள்ளிக்கிழமை (பிப். 12) தெப்பத் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதிக வெயில் காரணமாக தெப்பத்திலுள்ள தண்ணீா் குறைந்துவிடும் என்பதால், கடந்த 2 நாள்களாக இங்குள்ள கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்து தெப்பத்தில் நிரப்பும் பணி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன், கோயில் ஊழியா்கள் மண்டகப் படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com