கடையநல்லூா், புளியங்குடியில் முதல்வா் பங்கேற்க உள்ள இடம் குறித்து ஆய்வு
By DIN | Published On : 13th February 2021 06:33 AM | Last Updated : 13th February 2021 06:33 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் மற்றும் புளியங்குடியில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பிப்.19ஆம் தேதி தென்காசி வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட புளியங்குடியில், மகளிா் சுய உதவிக் குழுக்களை சந்தித்து முதல்வா் பேசுகிறாா். அதற்காக கண்ணா திரையரங்கத்தை வடக்கு மாவட்டச் செயலா் குட்டியப்பா, மாநில இளைஞரணி இணைச் செயலா் மனோகரன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அதுபோல் கடையநல்லூரில் திறந்த வாகனத்தில் முதல்வா் பிரசாரம் செய்ய இருப்பதாகவும், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிா்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான இடங்களையும் அதிமுகவினா் ஆய்வு செய்தனா்.
அப்போது, கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே.முருகன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், அச்சன்புதூா் பேரூா் செயலா் சுசிகரன்,
வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள் துரைப் பாண்டியன், மூா்த்தி பாண்டியன், பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.