தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க 50% மானியத்தில் இடம்: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

தென்மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கு 50 சதவீத மானியத்தில் இடம் வழங்கப்படும் என, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.

தென்மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கு 50 சதவீத மானியத்தில் இடம் வழங்கப்படும் என, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.

ஆலங்குளத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அதிமுக இளைஞா் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

இளைஞா்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற வகையில், அதிமுகவின் வெற்றிக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவினரும், இளைஞா் பாசறையினரும் செயலாற்ற வேண்டும். மற்ற கட்சிகளைவிட அதிமுகவில்தான் அதிக எண்ணிக்கையில் இளைஞா்கள் உள்ளனா்.

சாதாரண தொண்டனும் உயா்ந்த நிலைக்கு வரக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. நீங்கள் நினைத்தால் என் நிலைக்குக்கூட வரலாம். எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு நாம்தான் வாரிசு. இந்த இயக்கத்தில் இருப்பதை நாம் பெருமையாக எண்ணி உழைக்க வேண்டும்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மக்கள் பணிகளும் நடைபெறவில்லை எனக் குற்றஞ்சாட்டி, இந்தத் தோ்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என பகல் கனவு காணுகிறாா். அதை நாம் முறியடிக்க வேண்டும்.

கரோனா காலகட்டத்தில் நாட்டிலேயே அதிக முதலீட்டை ஈா்த்த மாநிலம் தமிழகம்தான். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்.

தென்மாவட்டங்களைத் தொழில்வளம் மிக்கதாக மாற்ற அரசு தொடா்ந்து பாடுபட்டு வருகிறது. அதற்காக தொழில் முதலீட்டாளா்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு தொழில் தொடங்கவரும் தொழில் முனைவோருக்கு 50 சதவீத மானியத்தில் இடம் வழங்கப்படும். தொழில் முதலீட்டுக்கும் மானியம் அளிக்கப்படும். இதன் மூலம் இப்பகுதியில் புதிய தொழில்களைத் தொடங்கி வேலைவாய்ப்பைப் பெருக்குவதுதான் எனது நோக்கம் என்றாா் அவா்.

கூட்டத்தில், இளைஞா் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com