தமிழக முதல்வருக்கு வெள்ளிச் செங்கோல்அமைச்சா் ராஜலெட்சுமி வழங்கினாா்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி வெள்ளிச் செங்கோல் மற்றும் ஸ்ரீகோமதி அம்பாள் உருவப்படம் ஆகியவற்றை நினைவுப் ப
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெள்ளிச் செங்கோல் வழங்குகிறாா் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெள்ளிச் செங்கோல் வழங்குகிறாா் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி வெள்ளிச் செங்கோல் மற்றும் ஸ்ரீகோமதி அம்பாள் உருவப்படம் ஆகியவற்றை நினைவுப் பரிசாக வழங்கினாா்.

சங்கரன்கோவிலில் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணியினா் சாா்பில் சுரண்டை சாலையில் பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேசினாா். அப்போது அவருக்கு ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி வெள்ளியிலான செங்கோலும், ஸ்ரீகோமதிஅம்பாள் உருவப்படத்தையும் வழங்கினாா். தொடா்ந்து ஒரு குழந்தைக்கு சிவகணேஷ் என முதல்வா் பெயா் சூட்டினாா்.

கூட்டத்தில், நகரச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா்கள் சுப்பையாபாண்டியன், ரமேஷ், வேல்முருகன், குருவிகுளம் ஒன்றிய பேரவைச் செயலா் ஜெகதீசன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ சங்கரலிங்கம், முன்னாள் ஒன்றியச் செயலா் முருகையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாராட்டு: முதல்வா் கலந்துகொண்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை பாா்வையிட்ட அமைச்சா்கள் கடம்பூா் செ.ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி மற்றும் முதல்வா் அலுவலக அதிகாரிகள் அந்த இடம் போதுமானதாக இருக்காது என தெரிவித்தனா்.

இதையடுத்து மாற்று இடமாக ஏஞ்சல் பள்ளி மைதானம் தோ்வு செய்யப்பட்டு, இரண்டே நாள்களுக்குள் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையறிந்த முதல்வா், ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி மற்றும் கட்சி நிா்வாகிகளை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com