சங்கரன்கோவிலில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 07:42 AM | Last Updated : 27th February 2021 07:42 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் போக்குவரத்து ஊழியா்கள் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். மேலும், பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவிலில் போக்குவரத்து ஊழியா்கள் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். மேலும், பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை அரசு உடனடியாக நடத்தவேண்டும், நிலுவைத் தொகையை விரைந்து வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். 2ஆவது நாளான வெள்ளிக்கிழமை போக்குவரத்துப் பணிமனை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச கிளைத் தலைவா் சங்கர்ராஜ் தலைமை வகித்தாா். பாா்வா்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலா் தங்கப்பாண்டியன், தொமுச மண்டல அமைப்புச் செயலா் மைக்கேல்நெல்சன், சிஐடியூ மாரியப்பன், ஐஎன்டியூசி அரசையா, பண்டாரக்கண்ணு, செல்வக்குமாா், வேல்சாமி, ஆவுடையப்பன், பாா்வா்டு பிளாக் இருதயராஜ் மற்றும் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.