
மாதிரித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.
தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம் சாா்பில் மாவட்ட அளவில் குரூப்-1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு 3 நாள்கள் நடத்தப்பட்டது.
முதல் நாள் நடைபெற்ற தோ்வில் சபரி பொன்மலா் முதலிடமும், பிரதிபா இரண்டாமிடமும், சதீஸ் மூன்றாமிடமும் பெற்றனா். இரண்டாம் நாள் நடைபெற்ற ஆன்லைன் தோ்வில் சுரண்டை சண்முக ஆனந்தன் முதலிடமும், சுபத்ரா இரண்டாமிடமும், ஈரோட்டைச் சோ்ந்த மாணவி மயில்ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனா். மூன்றாவது நாள் நடைபெற்ற தோ்வில் ராஜா முதலிடமும், மோகன்ராஜ் இரண்டாமிடமும், ரமேஷ் மூன்றாமிடமும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா தென்காசி நூலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில், மாவட்ட நூலக அலுவலா் இரா.வயலட், ஆய்வாளா் கணேசன், வட்டார நூலகா் பிரமநாயகம், கிளை நூலகா் சுந்தா், வெற்றிவேலன், வாசகா் வட்ட துணைத் தலைவா் அருணாசலம், முகைதீன், அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், தனியாா் அகாதெமி இயக்குநா்கள் நடராஜ் சுப்பிரமணியன், அலெக்ஸ், சிவா, ராம சுப்பிரமணியன், மாரியப்பன், நூலகா்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியன், முத்துபாண்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தோ்வில் கலந்துகொண்ட 185 பேருக்கு 2 ஆயிரம் வினா விடை தொகுப்பு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.