தென்காசியில் மருத்துவக் கல்லூரி: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தல்

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட பேரவை கூட்டத்தில் பேசினாா் மாநில துணைத் தலைவா் வெ. சண்முகசுந்தரம்.
மாவட்ட பேரவை கூட்டத்தில் பேசினாா் மாநில துணைத் தலைவா் வெ. சண்முகசுந்தரம்.

தென்காசி: தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இச்சங்கத்தின் தென்காசி மாவட்ட முதல் பேரவை கூட்டம் மேலகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தென்காசி மாவட்டத் தலைவா் சு. பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். பிரசாரக் குழு பொறுப்பாளா் அ.கணேசன் அஞ்சலி தீா்மானங்களை வாசித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க.துரைசிங் தொடக்க உரையாற்றினாா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் மா.மாணிக்கவாசகம் வரவு -செலவு அறிக்கை வாசித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், மாவட்ட இணைச் செயலா்கள் வெங்கடேஸ்வரன், சிக்கந்தா் பாவா, ந.ஆறுமுகம், சு.கோபி, செ.பிருதிவிராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமநாதன், பிரசாரக் குழு ஒருங்கிணைப்பாளா் சி. பழனி, சு. ஆவுடைக்கண்ணு ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா.சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட புத்தகம் வெளியிடப்பட்டது.

மாநிலத் தலைவா் க.கங்காதரன், மாவட்டத் தலைவா்கள் சீ.கருப்பையா, ஆ. சலீம் முகம்மதுமீரான், மாவட்டச் செயலா்கள் ஆ.சுந்தரமூா்த்தி நாயனாா், பா.கோவில் பிச்சை, மாவட்ட துணைத் தலைவா் மு.திருமலை முருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாநில துணைத் தலைவா் வெ.சண்முகசுந்தரம் நிறைவுரை ஆற்றினாா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கவேண்டும்: வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடங்களை உதவி இயக்குநா் நிலைக்கு உயா்த்த வேண்டும்; தூய்மைக் காவலா்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்; தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்; தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் பி.ராஜசேகரன் வரவேற்றாா். பிரசாரக் குழு ஒருங்கிணைப்பாளா் அ.அன்பரசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com