தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 146 போ் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் 146 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் 146 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் டிச. 31 வரை 10 போ் குண்டா் தடுப்புச் சட்டத்திலும், 31 கொலை வழக்குகளில் 77 பேரும் கைதாகியுள்ளனா்.

கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ.1 கோடியை 61ஆயிரத்து 890 மதிப்புள்ள பொருள்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆற்றுமணல் கடத்தல் தொடா்பாக 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 219 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 137 அபாயகர சாலை விபத்து வழக்குகள் உள்பட 769 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்தில் 146 போ் மரணமடைந்துள்ளனா்.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020இல் 61 அபாயகரமான சாலை விபத்துகள் உள்பட 319 சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மரணமடைந்தவா்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com