திருச்சிற்றம்லபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பாலம்

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பாலம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
பாலம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணி திங்கள்கிழமை தொடங்கியது.

சிற்றாறு பாசனத்தின் கீழ் திருச்சிற்றம்பலம் அணைக்கட்டில் இருந்து சுரண்டை பெரியகுளத்திற்கு செல்லும் கால்வாயின் குறுக்கே பாலம் இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்வதற்கு 3 கி.மீ தூரம் சுற்றிச்செல்லும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து விவசாயிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பாலம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மாரியப்பன், மணிகண்டன், சண்முகவேல், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சாமிநாதன், எபன் குணசீலன், அமல்ராஜ், இருளப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com