ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்: நிலம் கையகப்படுத்த கருத்துக் கேட்பு

ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றோா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கால்வாய் திட்டத்துக்கு நிலம் வழங்கும் ஆவுடையானூா், கடையம் பெரும்பத்து, வெங்காடம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்கள், பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியா், கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்காக சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். கால்வாய்க்காக வெட்டப்படும் மணலை விளைநிலங்களில் போடாமல் இருக்கவும், புதிய சட்ட விதிகளின்படி இழப்பீட்டுத் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com