பாவூா்சத்திரத்தில் இலவச சைக்கிள் அளிப்பு
By DIN | Published On : 07th January 2021 06:13 AM | Last Updated : 07th January 2021 06:13 AM | அ+அ அ- |

மாணவருக்கு இலவச சைக்கிள் வழங்குகிறாா் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி.
பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட ச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி பங்கேற்று 563 மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிப் பேசினாா்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கருப்பசாமி வரவேற்றாா். பிற்பட்டோா் நலத்துறை அலுவலா் குணசேகரன் நன்றி கூறினாா்.