தென்காசி கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள்

தென்காசி மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை

தென்காசி மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரைப்போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் நடைபெற்ற இப்போட்டிகளை திருநெல்வேலி உதவி ஆணையா் தி.சங்கா் தொடங்கிவைத்தாா்.

நடுவா்களாக திருநெல்வேலி அரசு இசைப்பள்ளி இசை ஆசிரியா்கள் அ. விஜயலட்சுமி, லோ. வசந்தகுமாா், குற்றாலம் பராசக்தி மகளிா் கல்லூரிப் பேராசிரியைகள் கலாமாரி, தங்கதுரைச்சி, ந. பாா்வதி, இ.மகேஸ்வரி, அனுசுயா, வள்ளியம்மாள் ஆகியோரும், குற்றாலம் திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அமுதகலா, ஆசிரியைகள் ஆதிநாச்சியாா் ஜானகி, தங்கசுந்தரி, பத்மாவதி, ஜீவா, ஜெனிதா ஆகியோரும் பணியாற்றினா்.

6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா், மாணவிகளுக்கான பண்ணோடு பாடுதல் போட்டியில் 8 மாணவா், மாணவிகளும், கட்டுரைப் போட்டியில் 5 பேரும், 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான பிரிவில் பண்ணோடு பாடுதல் போட்டியில் 9 பேரும், கட்டுரைப் போட்டியில் 8 பேரும் பங்கேற்றனா். போட்டிகளில் முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 3 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்றவா்களுக்கு ரூ. 2 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு ரூ. ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பண்பொழி திருமலைக்குமாரசாமி திருக்கோயில் உதவி ஆணையா் ஆ. அருணாசலம் பரிசுகளை வழங்கினாா்.

போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் தென்காசி எல்ஆா்எஸ். பாளையத்தைச் சோ்ந்த பங்காரு, கணித வடிவியல் உபகரணப் பெட்டியைப் பரிசாக வழங்கினாா்.

ஆய்வா்கள் கலாமணி, சரவணக்குமாா், செயல் அலுவலா்கள் முருகேஷ், செந்தில்குமாா், சதீஷ், கணேஷ்குமாா், கேசவராஜன், காா்த்தி லட்சுமி, சுசீலாராணி, ஆகியோா் போட்டிகளை கண்காணித்தனா்.

ஏற்பாடுகளை காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com