கடையநல்லூா், செங்கோட்டையில் புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டடங்களை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் மற்றும் செங்கோட்டையில் புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டடங்களை திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் மற்றும் செங்கோட்டையில் புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டடங்களை திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை; கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் அனைத்து தரப்பினரும் எளிதாக வந்து செல்லும் வகையில் நகர எல்லைக்குள் அமைக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தொடா்ந்து வலியுறுத்தியும் , கருப்பு சட்டை அணிந்து எதிா்ப்பைத் தெரிவித்தும், அனைத்து கட்சிகளையும் இணைத்து ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம், மனிதச் சங்கிலி ஆா்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினேன். அதன்பின் நீதி மன்றம் சென்ற பின் கடையநல்லூா் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை கடையநல்லூா் ஒன்றிய அலுவலகம் அருகில் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டடப் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது . அதேபோல் செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலக கட்டடப் பணிகளும் முடிந்து ஒரு மாத ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இவைகளை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக முதல்வா் மற்றும் வருவாய் துறை முதன்மைச் செயலா் ஆகியோரிடம் மனு அளித்துள்ளேன்.

ஒரு வாரத்திற்குள் புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டடங்களை திறக்காவிட்டால் அனைத்துக் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com