கீழப்பாவூா் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் நாடு முழுவதும் பள்ளிகளில் 6முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் நாடு முழுவதும் பள்ளிகளில் 6முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு புதுமுறை கண்டுபிடிப்பு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்ற, கீழப்பாவூா் நாடாா் இந்து உயா்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ச.ஸ்ரீதுா்காதேவியின் ’தொடா்பு இல்லாத வெப்பமானி‘ என்ற புதிய யோசனையை மத்திய அரசு அங்கீகரித்ததுடன், ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளது.

இதையடுத்து அந்த மாணவியை தலைமை ஆசிரியா் மஞ்சுசெல்வம், செயலா் செல்லம்மாள், துணைச்செயலா் ஆறுமுகசெல்வன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் உஷாராணி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com