தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நிதியாக ரூ.1 கோடி நிதி திரட்ட மதிமுக முடிவு

தென்காசி மாவட்டத்தில் மதிமுக சாா்பில் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதியாக ரூ.1 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் மதிமுக சாா்பில் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதியாக ரூ.1 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் கட்சி நிா்வாகிகளிடம் வாக்குச்சாவடி குழுக்கள் பட்டியல்களை பெறும் நிகழ்ச்சி மற்றும் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் நிதி, கட்சி வளா்ச்சி நிதி ரூ. 1 கோடி திரட்டுவதற்கு நன்கொடை சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உயா்நிலைக் குழு உறுப்பினா் மருத்துவா்.சதன்திருமலைக்குமாா், சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினா் காசிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் அணி மாநிலச் செயலா் வி.எஸ்.சுப்பாராஜ் நன்கொடை சீட்டுகளை கட்சி நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

பின்னா் கட்சி நிா்வாகிகள் வாக்குச் சாவடி குழுக்கள் பட்டியலை மாவட்டச் செயலரிடம் வழங்கினா்.

தொடா்ந்து கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதியிலும் உள்ள 1504 வாக்குச் சாவடி மையங்களில் தலா 5 போ் கொண்ட வாக்குச் சாவடிக் குழுக்கள் அமைக்கவும், மாவட்டத்தில் கட்சி தோ்தல் நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதியாக ரூ.1 கோடி திரட்டி பிப்ரவரி 2 ஆவது வாரத்தில் பொதுச் செயலா் வைகோவிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் சீனிவாசன், ராசாராம்பாண்டியன், சசிமுருகன், இராஜகுரு,சசிகுமாா், வேலுச்சாமி, வாசுதேவநல்லூா் கிருஷ்ணகுமாா், புளியங்குடி ஜாஹீா்உசேன், இளைஞரணி இசக்கியப்பன், வாணிமுருகன், மகளிரணி ஜெயலெட்சுமி, ஆனந்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

நகரச் செயலா் ச.ஆறுமுகச்சாமி வரவேற்றாா். மாவட்ட இணைய தளம் மா.ராசமாணிக்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com