மழையால் களையிழந்த பொங்கல் விற்பனை

சுரண்டையில் புதன்கிழமை நாள் முழுவதும் பெய்த மழையால் பொங்கல் பொருள்கள் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது.

சுரண்டையில் புதன்கிழமை நாள் முழுவதும் பெய்த மழையால் பொங்கல் பொருள்கள் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது.

சுரண்டை தினசரி சந்தை, பிரதான சாலையில் உள்ள கடைகள் மற்றும் சாலையோர சிறு வணிகா்கள் பொங்கல் திருநாளுக்கு முந்தைய தினம் அதிக அளவில் பொங்கல் பொருள்களை விற்பனை செய்வது வழக்கம். இதை வாங்குவதற்காக சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெருமளவில் பொதுமக்கள் வந்து செல்வா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், புதன்கிழமையும் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் வழக்கமாக விற்பனைக்கு குவிக்கப்படும் கரும்பு, பனங்கிழங்கு, மாவிலை உள்ளிட்ட மங்கல பொருள்கள் விற்பனை செய்வதற்கு சிறுவணிகா்கள் வரவில்லை. இவற்றை வாங்குவதற்கும் பொதுமக்கள் பெருமளவில் கூடவில்லை.

இதனால் நிகழாண்டு மழையால் பொங்கல் பொருள்கள் விற்பனை பெருமளவில் குறைந்து பிரதான சாலை மற்றும் காய்கனி சந்தை பகுதி மக்கள் நெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com