
கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மற்றும் திமுகவினா்.
சங்கரன்கோவிலில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பெண்கள் மற்றும் திமுகவினா் திரளானோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்கு, திமுக தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாபன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடிஅருணா, முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அம்பேத்கா் நகா், திருப்பூா் குமரன் நகா் போன்ற பல்வேறு தெருக்களைச் சோ்ந்த பெண்கள் திரளானோா் பங்கேற்றுப் பேசினா்.
இதைத் தொடா்ந்து பேசிய திமுக மாவட்டச் செயலா் சிவபத்மநாதன் பொதுமக்கள் கூறிய அனைத்து குறைகளையும் திமுக தலைவா் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாா்.
பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் போ.சங்கா், மகளிா் தொண்டரணி அமைப்பாளா் புனிதாஅஜய், அன்பு மணிகணேசன், சோமசெல்வபாண்டியன், இலக்கியஅணி அமைப்பாளா் கோ.சுப்பையா, மு.பிரகாஷ், அஜய் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நகரச் செயலா் சங்கரன் வரவேற்றாா். நகர இளைஞரணிச் செயலா் சரவணன் நன்றி கூறினாா்.