நிவாரணம் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

திருவேங்கடம் பகுதியில் கனமழையால் பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.
நிவாரணம் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

திருவேங்கடம் பகுதியில் கனமழையால் பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் மைப்பாறை, நடுவப்பட்டி, வரகனூா் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை

தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு சேதமடைந்த பயிா்களுடன் முற்றுகையிட்டனா். பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: மைப்பாறை, நடுவப்பட்டி, வரகனூா் பகுதியில் 8 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட

மக்காச்சோளம் பயிா்கள் கனமழையால் சேதமடைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30

ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், தாற்காலிக ஏற்பாடக விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சன்புதூா் நெடுவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-18-ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவா்கள் அளித்த மனு விவரம்: தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் எங்களுக்கு மட்டும் இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆகவே உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்.

சமத்துவ மக்கள் கழக தென்காசி மாவட்டச் செயலா் லூா்துநாடாா் அளித்த மனு: ஆய்க்குடி அரசு மருத்துவமனை அருகில் இருந்த பயணிகள் நிழற்குடைய 10 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு முன்பு பேருந்துகள் நின்று செல்லவும், பயணிகள் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com