போராட்டங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்: எஸ். பி. எச்சரிக்கை
By DIN | Published On : 26th January 2021 12:20 AM | Last Updated : 26th January 2021 12:20 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதை மீறி போராட்டங்களில் விவசாய வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்களில் பங்கேற்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று சில அரசியல் கட்சியினா் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டா் வாகனங்களில் ஊா்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. போராட்டங்களில் அனுமதியின்றி பயன்படுத்தும் டிராக்டா், இருசக்கர வாகனங்கள் மீது மோட்டாா் வாகனசட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.