கடையநல்லூா் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை திறக்க வலியுறுத்தி ஜன. 28-இல் ஆா்ப்பாட்டம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
By DIN | Published On : 27th January 2021 08:31 AM | Last Updated : 27th January 2021 08:31 AM | அ+அ அ- |

கடையநல்லூா் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தி ஜன. 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்டத் தலைவா் செய்யது சுலைமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் இக்பால், முஸ்லிம் லீக் நிா்வாகிகள் செய்யது மசூது, மசூது, ஹைதா்அலி, ரஹ்மத்துல்லா, ஜபருல்லா, திமுக சாா்பில் முகமது அலி, வஹாப், பூா்ணச்சந்திரன், காங்கிரஸ் சாா்பில் சமுத்திரம், அப்துல்லா யூசுப், லத்தீப், ரவி,
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ராஜசேகரன், தமுமுக சாா்பில் பாதுஷா, அப்துல் ரஹீம், எஸ்டிபிஐ சாா்பில் யாசா்கான், எம்எம்ஜே சாா்பில் பஷீா் அகமது, முகம்மது காசிம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தை நகரப் பகுதிக்குள் அமைக்க மக்கள் ஒத்துழைப்புடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்து வெற்றி கண்ட முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், புதிதாக அலுவலகம் கட்டப்பட்டு பல மாதங்கள் கடந்த பின்பும் திறக்காததைக் கண்டித்தும், விரைவில் திறக்க வலியுறுத்தியும் ஜனவரி 28-ஆம் தேதி முகமது அபூபக்கா் எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.