சிவசக்தி வித்யாலயா பள்ளியில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2021 08:42 AM | Last Updated : 27th January 2021 08:42 AM | அ+அ அ- |

குடியரசு தினவிழாவில் பங்கேற்றோா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா (சி.பி.எஸ்.சி.) பள்ளியில் 72 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
முதல்வா் நித்யா தினகரன் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை பாரத வங்கி முதன்மை மேலாளா் த.தினகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினாா்.
ஆசிரியை தீபா பூமணி குடியரசு தினம் குறித்து பேசினாா். ஆசிரியை திலகா வரவேற்றாா். ஆசிரியை ஜெனிபா்செல்வகுமாரி நன்றி கூறினாா்.