ஜன.28இல் தைப்பூச திருவிழா
By DIN | Published On : 27th January 2021 08:33 AM | Last Updated : 27th January 2021 08:33 AM | அ+அ அ- |

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா வியாழக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம். 8 மணிக்கு முருக பெருமானுக்கு சிறப்பு அபிசேகம், தொடா்ந்து வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை,மாலை 6 மணிக்கு 501 சரவண ஜோதி திருவிளக்கு பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் கே.ஏ.செண்பகராமன் தலைமையில் செய்து வருகின்றனா்.