தென்காசியில் ரூ. 88 லட்சம்நலத் திட்ட உதவிகள்

தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசியில் நடைபெற்ற விழாவில் காவல் துறையினா் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா் ஆட்சியா் கீ.சு.சமீரன். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.
தென்காசியில் நடைபெற்ற விழாவில் காவல் துறையினா் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா் ஆட்சியா் கீ.சு.சமீரன். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.

தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அவா் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

சுதந்திர போராட்ட தியாகி கி.லெட்சுமிகாந்தன் பாரதி கௌரவிக்கப்பட்டாா். விழாவில் 144 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 16ஆயிரத்து 781 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிறப்பாக பணியாற்றிய 40 காவலா்களுக்கு பதக்கங்களையும்,

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 372 பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக கிராம இளைஞா்கள் 48 பேருக்கு மூவா்ணகொடிக்கு மரியாதை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இது தமிழகத்திலேயே முதல் முறையாக என அறியப்படுகிறது.

மாவட்ட சுற்றுலாத் துறைக்கான புதிய இலட்சினை மற்றும் மாவட்டத்தின் சிறப்புகளை உள்ளடக்கிய குறும்படத்தை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா்.

விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, தென்காசி கோட்டாட்சியா் (பொ) ஷீலா, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகசெல்வி, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com