மேலப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 27th January 2021 08:41 AM | Last Updated : 27th January 2021 08:41 AM | அ+அ அ- |

கண் பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவா்கள்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வுக் குழு, சென்ட்ரல் அரிமா சங்கம், மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாவூா்சத்திரம் நண்பா கேக் வோ்ல்டு இணைந்து நடத்திய இம்முகாமில் மருத்துவா்கள் மினோ சசிகுமாா், அனீத் கே.வா்கீஸ் ஆகியோா் பரிசோதனை செய்தனா். இதில், 138 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 38 போ் அறுவை சிகிச்சைக்கு திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில், கண்தான விழிப்புணா்வு குழு நிறுவனா் கே.ஆா்.பி.இளங்கோ, அரிமா சங்கம் சாா்பில் ஆனந்த், சொக்கலிங்கம், நண்பா கேக்ஸ் சங்கரபாண்டியன், குரு பாரா மெடிக்கல் சோ்மன் வினோத்குமாா், சாய்பாபா டிரஸ்ட் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.