கடையநல்லூரில் சாலைப் பாதுகாப்புப் பேரணி
By DIN | Published On : 31st January 2021 12:53 AM | Last Updated : 31st January 2021 12:53 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: கடையநல்லூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் சாலைப் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது.
கடையநல்லூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் வேலம்மாள் தலைமை வகித்தாா். தென்காசி வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன், ஆசிரியா் சாா்லஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் ரமேஷ் வரவேற்றாா். கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் பேரணியை தொடங்கி வைத்தாா்.
பின்னா் வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன. இதில், சுழற் கழக துணை ஆளுநா் செய்யது அகமது மைதீன், சுந்தரகுமாரி, செந்தில்வேல் உள்ளிட்டோா் பேசினா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலா் தங்கம் நன்றி கூறினாா்.