‘விளைச்சல் பாதிப்பால் காய்கனிகள் விலை கடும் உயா்வு’

காய்கனிகள் விளைச்சல் குறைந்து வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆலங்குளம்: காய்கனிகள் விளைச்சல் குறைந்து வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

பொங்கல் பண்டிகை வரை காய்கனிகளின் விலை சராசரியாக இருந்தது. இதற்கிடையே, கடந்த சில நாள்களாக ஆலங்குளம் பகுதியில் காய்கனிகளின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ரூ. 50 க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் கிலோ ரூ. 110க்கும், ரூ. 20-30 வரை விற்பனையான வெண்டைக்காய் ரூ. 60 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடா்ந்து பெய்த கனமழை காரணமாகவும், போதிய வெப்பம் இல்லாமலும் பயிா்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கத்தரிக்காய் விளைச்சல் 6 இல் ஒரு பங்காக குறைந்துள்ளது. இதேபோன்று மற்ற காய்கனிகள் உற்பத்தியும் குறைந்து காணப்படுவதாலும், தேவை அதிகரித்துள்ளதாலும் தற்போது காய்கனிகளின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

காய்கனிகளின் விலை விவரம் (கிலோ): சீனி அவரை ரூ. 40, புடலை ரூ. 60, சுரைக்காய் ரூ. 25, வெள்ளரிக்காய் ரூ. 25, எலுமிச்சை ரூ. 40, மாங்காய் ரூ. 30, உருளை ரூ. 22, மிளகாய் ரூ. 40, சின்ன வெங்காயம் ரூ. 60, பெரிய வெங்காயம் ரூ. 40, கோஸ் ரூ. 16, பீன்ஸ் ரூ. 65, சேனைக் கிழங்கு ரூ. 20, பீட்ரூட் ரூ. 25, சேம்பு ரூ. 30, கருணை கிழங்கு ரூ. 40, இஞ்சி ரூ. 35, முருங்கை ரூ. 150, காலி பிளவா் ரூ. 45, சவ் சவ் ரூ. 22, அவரைக்காய் ரூ. 90, பூண்டு ரூ. 110, தக்காளிப்பழம் ரூ.22, வரி கத்தரி ரூ. 30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com