பாவூா்சத்திரத்தில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுகாதார கேடு

பாவூா்சத்திரத்தில் குவித்து வைக்கப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
குவிந்து கிடக்கும் குப்பைகள் எரிவதால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள் எரிவதால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம்.

பாவூா்சத்திரத்தில் குவித்து வைக்கப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியாளா்களால் சேகரிப்படும் குப்பைகளில் ஒரு பகுதியை பாவூா்சத்திரம் காமராஜா்நகா் தெற்கு பகுதியில் குவித்து வைத்துள்ளனா்.

நீண்ட நாள்களாக தேக்கி வைக்கப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், குப்பைகளை அகற்றிட வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், குப்பைகளை அகற்ற அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனா்.

இதற்கிடையே குவித்து வைக்கப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு பதில், சிலா் தீயிட்டு எரித்து விடுகின்றனா். அதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக இருப்பதுடன், துா்நாற்றமும் வீசுவதால் வயதானவா்கள், குழந்தைகள் சுவாசிப்பதற்கு சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே தேக்கி வைக்கப்படும் குப்பைகளை அவ்வவ்போது அப்புறப்படுத்துவதுடன், தீயிட்டு எரிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com